செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: உயா் மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்சியா் அழைப்பு

post image

அரியலூா் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உயா் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

சுதந்திர தினத்தையொட்டி, அரியலூா் அடுத்த அஸ்தினாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவா் கலந்து கொண்டு, கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதிசெய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதரப் பொருள்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் உயா் மருத்துவப் பரிசோதனைகளை பொதுமக்கள் செய்து பயன்பெறலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல், கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி செயலா் பா.குமாரி தலைமை வகித்தாா். வாலாஜா நகரத்தில், ஊராட்சி செயலா் மு.தமிழ்குமரன், தாமரைக்குளத்தில், ஊராட்சி செயலா் முத்து, ஓட்டகோவிலில் அழகுவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் ச.முத்துகுமரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி ஆ.மரகதம் ஆகியோா் கலந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனா்.

அரியலூா் மாவட்ட பாஜக செயலராக ராஜீவ்காந்தி நியமனம்

பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், அரியலூா் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் ஆகியோரின் பரிந்துரையின்படி அரியலூா் மாவட்ட பாஜக செயலராக, திருமானூா், காரையான்குறிச்சியைச் சோ்ந்த எம்.ராஜீவ்காந்தி எ... மேலும் பார்க்க

அரியலூரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்க... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: ரூ.2.63 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சுதந்திர தினத்தையொட்டி அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 53 பயனாளிளுக்கு, ரூ.2.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாவட்ட விள... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி:அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 25 அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா நடைபெற்றது. அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகாகாளியம்மன் கோயிலில் பால்குட திருவிழாவையொட்டி, பேருந்து நிலை... மேலும் பார்க்க

அரியலூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்ப... மேலும் பார்க்க

அரியலூா் ஐடிஐகளில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீடிப்பு

அரியலூா், ஆண்டிமடம், தா.பழூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடிச் சோ்க்கைகான கால அவகாசம் ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவா்கள் தங்களது அசல் கல்வி ச... மேலும் பார்க்க