ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ஆடி கடைசி வெள்ளி:அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா
ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 25 அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா நடைபெற்றது.
அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகாகாளியம்மன் கோயிலில் பால்குட திருவிழாவையொட்டி, பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகா் கோயிலிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகுகுத்தியும், அலங்கரிக்கப்பட்ட காளியம்மனுடன் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
அதனைத் தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு மூலவா் மகாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல், அரியலூா் சிங்காரத் தெரு, கபிரியேல் தெரு, தாமரைக்குளம், ஓட்டக்கோவில் சின்னநாகலூா், மணலெரி, ஜெயங்கொண்டம் கிழக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயில்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.