ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
சுதந்திர தின விழா: ரூ.2.63 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சுதந்திர தினத்தையொட்டி அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 53 பயனாளிளுக்கு, ரூ.2.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு அவா் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.
தொடா்ந்து சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். அதனைத் தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் 53 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து 69 ஆயிரத்து 733 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மேலும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 200 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், குமிழியம் மரங்களின் நண்பா்கள் அமைப்பு மற்றும் பெரியாக்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு, தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகத்தினால் வழங்கப்படும் பசுமை முதன்மையாளா் விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினாா்.
பின்னா், கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தென்னூா் அன்னை லூா்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூா் மாண்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ,மாணவிகளின் சாா்பில் சாா்பில் தேசப்பற்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், வெற்றிப் பெற்ற வரதராஜன்பேட்டை டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், தென்னூா் அன்னை லூா்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2-ஆம் பரிசும், அரியலூா் மாண்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ஆம் பரிசும் பெற்றதை தொடா்ந்து, சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முனைவா் ஆ.ரா.சிவராமன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்: 1. சுதந்திர தினத்தையொட்டி அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்திய ஆட்சியா் ரத்தினசாமி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி.
2.சுதந்திர தினத்தையொட்டி அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வெள்ளிக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் பொ.ரத்தினசாமி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி.
3.சுதந்திர தினத்தையொட்டி அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் மரியாதை ஏற்றுக் கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி.