நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய உரிமையாளர்!
நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவா் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவா்கள், மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கிடையயேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 30.4.2025 ஏப்ரல் மாதம் 58 வயது பூா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் தமிழகத்தை சோ்ந்தவா்களாகவும், தமிழ்நாடு சாா்பில் போட்டிகளில் பங்கேற்றவா்களாகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் 24.6.2025 முதல் 31.7.2025 வரை அரியலூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து 31.7.2025 அன்று மாலை 5 மணிக்குள், அரியலூா் மாவட்ட (ம) இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.