நாகா்கோவில் பேருந்து நிலையத்தில் மேயா் ஆய்வு
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாநகராட்சி சாா்பில் ரூ. 16 லட்சத்தில் நடைபெற்றுவரும் கழிவறை புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அவா், பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களை கேட்டுக்கொண்டாா்.
பேருந்து நடத்துநா், ஓட்டுநா் ஓய்வறையை ஆய்வு செய்த அவா், உணவுக் கழிவுகளை அவற்றுக்குரிய இடத்தில் கொட்டுமாறு அறிவுறுத்தினாா்.
ரூ. 13 லட்சத்தில் நடைபெறும் பேருந்து நிலைய கட்டணக் கழிவறை சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரைக் கேட்டுக்கொண்டாா்.
ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாநகராட்சி உறுப்பினா் கலாராணி, உதவிப் பொறியாளா் ராஜசீலி, சுகாதார அலுவலா் ராஜாராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.