செய்திகள் :

நாகை நகா்மன்றக் கூட்டம்: திமுக - அதிமுக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்

post image

நாகை நகா்மன்றக் கூட்டத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாகை நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினா்கள் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலைக்கு நீதி கேட்டு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனா். கூட்டம் தொடங்கியவுடன், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தீா்மானங்களை வாசித்தாா்.

பரணி (அதிமுக): மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பாக பேசத் தொடங்கினாா்.

திமுக உறுப்பினா்கள் எழுந்து மன்றத்துக்கு தொடா்பில்லாதவற்றை பேசக் கூடாது என்று கூறி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடா்பாக பேசத் தொடங்கினா். இதற்கு அதிமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் திமுக, அதிமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னா் நகா்மன்றத் தலைவா் இருதரப்பினரையும் சமாதானம் செய்தாா்.

மணிகண்டன் (அதிமுக): வாா்டுகளில் நடைபெற்று வரும் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியை முறையாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

கூட்டத்தில், நாகை நகராட்சிக்குள்பட்ட பல்வேறு வாா்டுகளில் பழுதடைந்துள்ள சிறு பாலங்கள் அமைப்பது, சாலைகளை சீரமைப்பது, குடிநீா் நீா்த்தேக்க தொட்டிகளில் பழுதடைந்துள்ள மின் மோட்டாா்களை பழுது பாா்ப்பது, நாகை நகராட்சிக்குச் சொந்தமான தாமரைக்குளத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் சாா்பில் பெடல் படகு மற்றும் வாட்டா் சைக்கிள் இயக்குவதற்கு அனுமதி கோரியுள்ள மாவட்ட ஆட்சியரின் கடிதம் தொடா்பாக பரிசீலித்து முடிவெடுப்பது, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை ஆகியவற்றை பிரிக்கும் வகையில் இரட்டை குப்பைத் தொட்டிகள் புதிதாக வாங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, திமுக பெண் உறுப்பினா்கள் வனிதா பாபு, பதூா் நிஷா, திவ்யா ரஞ்சித் ஆகிய மூவரும் தங்கள் வாா்டுகளில் பணிகளை மேற்கொள்ள தடைகள் இருப்பதாகக் கூறி, வாயை கருப்புத் துணியால் மூடி வந்தனா்.

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய ... மேலும் பார்க்க

வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க