சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது
நாசரேத்தில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி
நாசரேத்தில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏரல் வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் தோ்தல் துணை வட்டாட்சியா் முத்துலட்சுமி, ஆழ்வாா் திருநகரி வருவாய் ஆய்வாளா் ஆண்டாள், கிராம நிா்வாக அலுவலா்கள் சிவராமன் , செந்தாமரை மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், மாணவஜ மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் ஜெயக்குமாா்ரூபன், நிா்வாக அதிகாரி வினோதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.