செய்திகள் :

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

post image

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அளிப்பதாகவும் நடப்பாண்டில் நீட் தேர்வினால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருந்த சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த கவுதம் என்ற மாணவர்  தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மாணவர் கவுதமை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவர் கவுதம் ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த முறையும்  நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காமல் போய்விடுமோ? என்ற அச்சம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வு, மாணவர்களை எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்குத் தூண்டுகிறது என்பதற்கு மாணவன் கவுதமின் தற்கொலை எடுத்துக்காட்டு.

நீட் தேர்வுக்கு அஞ்சி நடப்பாண்டில் மட்டும்  இதுவரை 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி  எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, கடந்த மே 4-ஆம் தேதி கயல்விழி என 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இப்போது மாணவர் கவுதம் உயிர் நீத்திருக்கிறார். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட 2017-ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடரும் நிலையில், அதற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. நீட் எந்த நோக்கங்களுக்காக கொண்டு வரப்பட்டது என்று மத்திய அரசு கூறியதோ, அந்த நோக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை. நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 150 மதிப்பெண் எடுத்தவர்கள் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால், 500க்கும் கூடுதலான மதிப்பெண்கள் எடுத்திருந்தும்கூட லட்சக்கணக்கில் கட்டணம் கட்ட வழியில்லாதவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.  மருத்துவ மாணவர் சேர்க்கையை தகுதியைவிட பணம்தான் தீர்மானிக்கிறது என்பதுதான்  நீட் தேர்வின் அறிமுகத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழலாகும். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தும் நீட் தேர்வு தேவையா? என மத்திய அரசு சிந்திக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருபுறம்  ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக,  புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி  வசனம் பேசிய முதலமைச்சர், அதன் பின் 50 நாட்களாகப் போகும் நிலையில் சட்டப் போராட்டம் நடத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் எந்த வழக்கையும் தொடரவில்லை.

மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களை  நீட் என்ற ஒரு தேர்வு தொடர்ந்து பலி வாங்குவதை அனுமதிக்க முடியாது. எனவே, நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து  நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் திறந்த மனதுடன் நீட் தேர்வின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அதை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்களிக்க வேண்டும்.

இதையும் படிக்க | பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இலவச மருத்துவ முகாம்!

அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களுக்கு மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் பார்க்க

காவல் துறைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

ஈரோடு, திருப்பூர் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினரை நேரில... மேலும் பார்க்க

மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்

மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திர... மேலும் பார்க்க

மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க