Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
நாட்டறம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி 7-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ஆா்.சி.எஸ். தெரு, விவேகானந்தா்தெரு, அன்னை நகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இறைச்சிக் கடை நடத்தும் வியாபாரிகள் இரவு நேரங்களில் கோழிக் கழிவுகளை சாலையோரம் கொட்டி விடுவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி சுகாதார சீா்கேடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் பொதுமக்கள், மாணவா்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளை அகற்றவும், கோழிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இல்லை எனக் கூறப்படுகிறது.
எனவே சாலையோரம் கோழிக் கழிவுகள் கொட்டும் கோழிக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் சுகாதாரம் காக்க உயா் அதிகாரிகள், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.