செய்திகள் :

நாட்டின் ஒரே தங்கச் சுரங்கமும் இனி தேசியமயம்! நைஜர் ராணுவ அரசு அதிரடி!

post image

நைஜர் நாட்டை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு, அந்நாட்டிலுள்ள ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை, தேசியமயமாக்குவதாக அறிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியின் மூலம், அப்போதைய அரசு கவிழ்க்கப்பட்டு, ராணுவம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது.

ராணுவ அரசின் ஆட்சி துவங்கியது முதல், அந்நாட்டிலுள்ள வளங்களைச் சுரங்கம் தோண்டியெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நைஜர் நாட்டின் ஒரேயொரு தங்கச் சுரங்கமான சொசைடே டெஸ் மைன்ஸ் டு லிப்டாகோவை (எஸ்.ஐ.எல்), ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக்கினல் ரிசோர்சஸ் எனும் நிறுவனம் நிர்வகித்து வந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு அந்தச் சுரங்கத்தின் அதிகப்படியான பங்குகளை வாங்கியதன் மூலம் அது அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்நிறுவனம் பல அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, எஸ்.எம்.எல்-ஐ கைப்பற்றி தேசியமயமாக்குவதாக, நைஜர் ராணுவ அரசின் தலைவர் ஜெனரல் அப்துர்ரஹ்மானே டியானி அறிவித்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அந்தச் சுரங்கத்தில், தொழில்துறை தங்கம் உற்பத்தி 177 கிலோ அளவிலும், கைவினை உற்பத்தி 2.2 டன்களாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அந்தச் சுரங்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். இதனால், அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் 2,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்களைக் களமிறக்கியது.

ஆப்பிரிக்க நாடுகளான புர்கினா ஃபஸோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் ராணுவ ஆட்சி அமைந்த பின்னர் அந்நாடுகளின் வளங்களைக் கட்டுப்படுத்தி வந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதல்! மத்தியஸ்தம் செய்த டிரம்ப்புக்கு நோபல் வழங்க கோரிக்கை!

The military government ruling Niger has announced the nationalization of the country's only gold mine.

புதின் - டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளும... மேலும் பார்க்க

ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல... மேலும் பார்க்க

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்ப... மேலும் பார்க்க

டிரம்ப் விருந்துக்கு மறுப்பு! அமெரிக்க வரலாற்றை மாற்றியமைக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ஆஸ்கர் நடிகை!

ஒருநாள் இரவு விருந்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்ததாக பிரிட்டிஷ் நடிகை கூறியது பேசுபொருளாகியுள்ளது.ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சனுக்... மேலும் பார்க்க

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! - நெதன்யாகு

காஸாவில் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.ஜெருசலேமில் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது குறிக்கோள் காஸாவை கையகப்படுத்து... மேலும் பார்க்க