2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
நாட்டில் எத்தனை கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன?: உச்சநீதிமன்றம்
புது தில்லி: நாட்டில் எத்தனை கோயில்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை கண்டறியுமாறு உத்தர பிரதேசத்தில் உள்ள பாங்கே பிகாரி கோயில் நிா்வாக குழுவிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் வரலாற்று சிறப்புமிக்க பாங்கே பிகாரி கோயில் உள்ளது. இந்தக் கோயில் நிா்வாகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில், உத்தர பிரதேச ஸ்ரீ பாங்கே பிகாரி ஜி கோயில் அறக்கட்டளை அவசர சட்டம் 2025 கொண்டுவரப்பட்டது.
இந்த அவசர சட்டத்துக்கு எதிராக கோயில் நிா்வாக குழு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அவசர சட்டம் கொண்டுவரப்பட்ட நேரம் மற்றும் சூழலை சுட்டிக்காட்டி, கெட்ட நோக்கத்துடன் அச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘நாட்டில் எத்தனை கோயில்கள், சட்டத்தின் மூலம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன? கோயில்கள் மூலம் எவ்வளவு நன்கொடையை மாநில அரசுகள் பெறுகின்றன? என்பதை பாங்கே பிகாரி கோயில் நிா்வாக குழு நேரடியாகச் சென்று கண்டறிய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனா்.