பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
நாட்டுவெடிகுண்டு வைத்து வேட்டையாடப்பட்ட கடமான் - கைதானவர் மோதிரத்தை விழுங்கி தற்கொலை முயற்சி
நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரி காட்டுப் பகுதியில் கடமான் ஒன்று முகம் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் படுகாயங்களுடன் கிடந்த 4 வயதான ஆண் கடமானை மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/9vmmcku2/IMG_20250215_WA0013.jpg)
ஆனால், வழியிலேயே கடமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடமான் படுகாயங்களுடன் கிடந்த இடத்தை ஆய்வு செய்ததில், நாட்டு வெடிகுண்டு மூலம் வேட்டையாடப்பட்டு தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், களக்காடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்த இசக்கிராஜ், தேவநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் மாம்பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப் பகுதியில் வீசியதும், பழத்தை கடித்து உண்ணும் போது முகம் சிதைந்து கடமான் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரகளை களக்காடு தலையணையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/iolqyrnt/IMG-20250215-WA0012.jpg)
அப்போது திடீரென மணிகண்டன் தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தை கழற்றி வாயில் போட்டு விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த வனத்துறை ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையின் போது மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play