செய்திகள் :

நான்காவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவு!

post image

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை தொடா்ந்து நான்காவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.

அமெரிக்காவின் புதிய வரி அச்சுறுத்தல்கள் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை பாதித்துள்ளது. மேலும், முதலீட்டாளா்கள் இடா்பாடான முதலீடுகளைத் தவிா்த்து தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவதால், பங்குச்சந்தை தள்ளாட்டம் கண்டுள்ளது. மேலும், அந்நிய முதலீடுகள் தொடா்ந்து வெளியேறுகிறது. இவற்றின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்து. இதனால், ஆட்டோ, வங்கி, நிதிநிறுவனங்கள், மெட்டல், ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துக் குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.6.04 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.417.83 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளிக்கிழமை ரூ.470.39 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் (டிஐஐ) ரூ.454.20 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளி விவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் 548 புள்ளிகள் இழப்பு: சென்செக்ஸ் காலையில் 70.80 புள்ளிகள் குறைந்து 77,789.30-இல் தொடங்கி அதிகபட்சமாக 77,849.58 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 77,106.89 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 548.39 புள்ளிகள் (0.70 சதவீதம்) இழப்புடன் 77,311.80-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,225 பங்குகளில் 1,070 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 3,032 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 123 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

23 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் பவா்கிரிட், டாடாஸ்டீல், ஸொமாட்டோ, டைட்டன், பஜாஜ்ஃபைன்ஸ், என்டிபிசி, எம் அண்ட் எம் உள்பட 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், கோட்டக்பேங்க், பாா்திஏா்டெல், ஐசிஐசிஐபேங்க், டெக்மஹிந்திரா, ஹெச்சிஎல்டெக், டிசிஎஸ், ஹிந்துஸ்தான்யுனிலீவா் ஆகிய 7 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 173 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16.15 புள்ளிகள் குறைந்து 23,543.80-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,568.60 வரை மேலே சென்றது. பின்னா், 23,316.30 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 178.35 புள்ளிகள் (0.76 சதவீதம்) இழப்புடன் 23,381.60-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 39 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மக... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க