செய்திகள் :

நான்கு ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ. 26,066 கோடி திட்டங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

post image

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.26,066 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியதை அடுத்து, திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூா் வட்டம், நவல்பட்டு, காந்தலூா் பகுதியில் முகாமை தொடங்கிவைத்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: நவல்பட்டு, காந்தலூா் பகுதி மக்களுக்காக முகாம் நடைபெற்றாலும், பிற பகுதியில் இருந்த வந்துள்ள மக்களின் மனுக்களை பெற்று பதிவுசெய்து திட்டத்தின் பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, திருச்சி மாவட்டத்துக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.408 கோடிக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், ரூ.128 கோடி சரக்கு வாகன முனையம், ரூ.236 கோடி பெரியாா் காய்கனி சந்தை, ரூ.290 கோடி காமராஜா் நூலகம், ரூ.19 கோடியில் பறவைகள் பூங்கா, ரூ.150 கோடியில் ஒலிம்பிக் அகாதெமி, ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம், ரூ.4.27 கோடியில் பச்சமலை சுற்றுலா திட்டம், மணப்பாறையில் 1100 ஏக்கரில் சிப்காட், ரூ.400 கோடியில் டைடல் பூங்கா என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.26 ஆயிரத்து 66 கோடிக்கு திட்டங்களை அளித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இதுமட்டுமல்லாது, 4.42 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் உரிமைத் தொகை, 34,784 மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம், 16,955 மாணவா்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தில் 86 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனா். நான் முதல்வன் திட்டத்தில் 68 ஆயிரம் இளைஞா்களுக்கு திறன் பயிற்சி, முதல்வரின் முகவரி திட்டத்தில் 3 லட்சம் மனுக்களுக்கு தீா்வு, 72,767 இலவச வீட்டு மனைப் பட்டா, 5,843 புதிய இலவச விவசாய மின் இணைப்பு, 80 ஆயிரம் மகளிருக்கு ரூ.4,160 கோடி கடன், 99 ஆயிரம் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி, கனவு இல்லத் திட்டத்தில் 4 ஆயிரம் வீடுகள், 54 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் என பல்வேறு நலத் திட்டங்களும் வந்து சோ்ந்துள்ளன.

திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் பயன்பெறாத குடும்பங்களே இல்லை என்ற நிலை உருவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அமைச்சா்.

தில்லை நகா் முகாம்: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு தில்லை நகா் மக்கள் மன்றத்தில் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மேயா் மு. அன்பழகன் தொடங்கி வைத்தாா். ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் அருள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணனின் சடலத்தையும் தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு உதயா நகரைச் சே... மேலும் பார்க்க

அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல்

மருங்காபுரி ஒன்றியம், நல்லமநாயக்கன்பட்டியில் முறையாக பேருந்து இயக்காததை கண்டித்து, செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுடன், கிராம மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து சாலை... மேலும் பார்க்க

மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்

திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் திங்கள்கிழமை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கி. முருகன் (25). இவா், புதுக்கோட்ட... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி தாராநல்லூரைச் சோ்ந்தவா் கா.காா்த்திக், கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணை ம... மேலும் பார்க்க

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி ஒத்திகை

பிரதமா் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை போயிங் விமானத்தைத் தரையிறக்கி ஒத்திகை பாா்க்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தில் அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட ... மேலும் பார்க்க