செய்திகள் :

நாமக்கல்லில் கோழிப்பண்ணை உரிமையாளரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை

post image

நாமக்கல்லில் கோழிப்பண்ணை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளா்கள் விற்பனை சங்கத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம். இவா் நாமக்கல்-மோகனூா் சாலை பகுதியில் வசித்து வருகிறாா். நாமக்கல் - திருச்சி சாலையிலும், கிருஷ்ணகிரியிலும் இவரது அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மோகனூா் அருகே பரளி கிராமப் பகுதியில் முட்டைக் கோழிப்பண்ணையை சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறாா். மேலும், கோழித்தீவன ஆலை, கோழிக்குஞ்சு பொறிக்கும் ஆலை மற்றும் கறிக்கோழிப் பண்ணைகளையும் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கோவை வருமானவரித் துறை அலுவலகத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினா் நாமக்கல் வந்தனா். அவா்கள், வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு, அலுவலகம் மற்றும் நிதிநிறுவனம் ஆகியவற்றில் சோதனை நடத்தினா். இந்த சோதனை மாலை 5 மணிக்கும் மேலாக நீடித்தது. கணினிகளில் பதிவு செய்த வரவு - செலவு விவரங்களையும், வருமானவரி செலுத்தியதற்கான தகவல்களையும் அதிகாரிகள் கேட்டறிந்ததாகவும், சோதனையின்போது முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறையினா் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையின்போது அவரது வீடு, அலுவலகங்களுக்குள் வெளிநபா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் முற்றுகை போராட்டம்

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நாமக்கல்லில் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு நாமக்கல் - கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க டயா் ரீட்ரேடிங் சங்கம் கோரிக்கை

டயா் ரீட்ரேடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம், நாமக்கல் தாலுகா டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்கம் ச... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

நாமக்கல் புறவழிச்சாலை நான்கு முனை சந்திப்புகளில் தொடா் விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாமக்கல் முதலைப்பட்டிபுதூரில் இருந்து கரூா் தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 44.42 லட்சம்

நாமக்கல் நரசிம்மா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.44.42 லட்சம் கிடைத்தது. நாமக்கல்லில் நரசிம்ம சுவாமி, ஆஞ்சனேயா் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களுக்கு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிச... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 28.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ. 28.92 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்... மேலும் பார்க்க

ராசிபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

ராசிபுரம்: ராசிபுரம் ரயில் நிலையம் பகுதியில் மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.நாடுமுழுவதும் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ், அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள்... மேலும் பார்க்க