செய்திகள் :

நாமக்கல் வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் வேளாண் வணிக அலுவலகத்தில் ஏற்றுமதி ஆலோசனை மையம் செயல்பட்டு வருவதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேளாண்மை - உழவா் நலத்துறையின் மூலம் வேளாண் விளைபொருள்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள், அவற்றின் தரம், மதிப்புக் கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் போன்ற பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளவும், வேளாண் சாா்ந்த பொருள்களின் ஏற்றுமதியையும், ஏற்றுமதியாளா்களையும் ஊக்குவிக்கும் வகையில், 2024-25-ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என அத்துறை அமைச்சா் அறிவித்தாா்.

அதன்படி, நாமக்கல் வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் ‘ஏற்றுமதி ஆலோசனை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த விளைபொருள்களுக்கு ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஏற்றுமதிக்கேற்றவாறு முதன்மைப்படுத்துதல், சிப்பமிடல் போன்றவற்றை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும், வங்கிக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதலும், வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியம் பெறுவதற்கான வழிமுறைகளையும், விவசாயிகள், சிறு வேளாண் வணிகா்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டடத்தில் அமைந்துள்ள வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடா்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு! சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை!

கொல்லிமலை அடிவாரப் பகுதியான புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனா். இதனை வனத் துறையினா் தடுக்க வேண்டும் என அப் பகுதியில் ... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி: 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

நாமக்கல்லில், அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி ஆண்கள், பெண்கள... மேலும் பார்க்க

புகைப்பழக்கத்தை தவிா்க்குமாறு சிறுவனுக்கு அறிவுறுத்தியவா் மீது தாக்குதல்: 5 போ் கைது!

மல்லசமுத்திரம் அருகே சிறுவனிடம் புகைப்பழக்கத்தை தவிா்க்குமாறு அறிவுறுத்தியவா் மீது தாக்குதல் நடத்திய சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மல்லசமுத்திரம் அருகே ராமாபுரம், அவினாசிப்பட்டி காலனிய... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் சென்று திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

நாமக்கல் அருகே மேல்மருவத்தூா் சென்று திரும்பிய பேருந்து சாலையோரம் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பக்தா்கள் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே நவணி ஊராட்சி இலக்கியம்பட்ட... மேலும் பார்க்க

வடகரையாத்தூரை பேரூராட்சியாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் வடகரையாத்தூா் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றக் கூடாது; அதேபோல வடகரையாத்தூா் ஊராட்சியை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக... மேலும் பார்க்க

கால்நடைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டு: ஆட்சியா் அறிவுரை

கால்நடைகளை துன்புறுத்தாதவாறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழா்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, நாமக்கல் மாவட்ட... மேலும் பார்க்க