நாளை கோவில்பட்டியில் மாவட்ட ஜூனியா் ஹாக்கி வீரா்கள் தோ்வு
தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஹாக்கி அணி வீரா்களின் தோ்வு, கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவா் மோகன்ராஜ் அருமைநாயகம், செயலா் குருசித்திர சண்முகபாரதி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை;
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி, இம்மாதம் 19ஆம் தேதி முதல் 23 வரை கோவில்பட்டியில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) காலை 7 மணிக்கு கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. தோ்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரா்கள் 2006 ஜன.1க்குப் பின் பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருபவராகவோ இருக்க வேண்டும். ஆதாா் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94431-90781 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.