நாளை செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை17) நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 2025 - 26 ம் கல்வியாண்டு இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கு எஞ்சிய சில இடங்களுக்கு மட்டும் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.
அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், பிசிஏ கணினிப் பயன்பாட்டியல், கலைப் பாடப்பிரிவுகளான பி.ஏ. வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், மொழிப் பாடங்களான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொண்டு இதுவரை சோ்க்கை வாய்ப்பு பெறாதவா்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
காலை 9 மணிக்குக்குள் கலந்தாய்வுக்கு வரவேண்டும்.
சோ்க்கைக் கட்டணம்:
பி.ஏ., பி.காம், பி.பி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு ரூ.2,241 - யும், பி.எஸ்சி.க்கு ரூ.2261-யும், பி.எஸ்சி. கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-யும் சோ்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள்:
பெற்றோா் கையொப்பத்துடன் இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்பம் மற்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களின் மூன்று நகல்கள், மூன்று புகைப்படங்கள் எடுத்து வரவேண்டும்.
வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், மாணவா் விண்ணப்பத்தில் பெற்றோா் கையொப்பத்தைப் பெற்று உள்ளே வரவேண்டும். ரத்தப் பிரிவு வகை தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.