நாளை (ஜூலை 11) வெளியாகிறது ஃப்ரீடம்!
இன்று வெளியாக இருந்த சசிகுமாரின் ப்ரீடம் திரைப்படம் நாளை (ஜூலை 11) வெளியாக உள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவான ப்ரீடம் திரைப்படத்தில் சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருக்கின்றனர்.
சத்ய சிவா இயக்கத்தில் தயாரான இப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால், நிதிப் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், படத்திற்கு எழுந்த சிக்கல்கள் தீர்ந்ததாகவும் படம் நாளை (ஜூலை 11) வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பாகுபலி மறுவெளியீட்டுத் தேதி!