செய்திகள் :

நின்று, கிடந்து, இருந்து...

post image

சோழ வளநாட்டில், "நின்று, கிடந்து, இருந்து' என மூன்று நிலைகளிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீசெüந்தரராஜ பெருமாள். மூலவராக பெருமாள் நின்ற நிலையிலும், "அரங்கப் பெருமான்' எனக் கிடந்த நிலையிலும், "கோவிந்தராஜன்' என இருந்த நிலையிலும் மூவகைக் கோலங்களில் கோயில் கொண்டுள்ளார். 108 திவ்யத் தேசங்களில் 19 ஆவதான இக்கோயில் மூலவர் ஸ்ரீசெüந்தரராஜ பெருமாள், தாயார் செüந்தரவல்லி உற்சவர் நாகை அழகியார்.

பத்திரகோடி எனும் விமானத்தில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு எழுந்தருளியுள்ளார் பெருமாள். கோயில் முகப்பில் நாற்கால் மண்டபம், அதையடுத்து 90 அடி உயரமுள்ள எழுநிலை கோபுரம், நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் கூடியுள்ளது. மேற்புற மதிலில் சிறு கோபுரத்துடன் கூடிய மேற்கு நோக்கிய வாயில் உள்ளது.

கோபுர வாசலுக்கு நேரே நீண்ட சந்நிதித் தெருவும் நாற்புறமும் தேரோடும் வீதிகளும் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், மன்னர் அகத்துறைப் பாடல்களாலான பதிகம் பாடியுள்ளார்.

பவழக்காளி அம்மன் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலும் தேரோடும் வீதிகளில் இருப்பது திருமால், கண்ணனாக அவதாரம் செய்தபோது அவனுடன் தோன்றி மறைந்த யோகமாயையாகிய சக்தி தெய்வத்தை நினைவூட்டிக் கொண்டிருப்பது போன்றுள்ளது.

இன்றைய நாகையம்பதி முன்னொரு காலத்தில் சுந்தராரண்யம் என்ற வனத்தின் நடுவே எழுந்ததாகும். இங்கு தெய்வத் தன்மையை நாரதர் வாயிலாகக் கேட்ட துருவன் என்ற அரசிளங்குமரன், திருமாலை நோக்கித் தவமியற்றினான். பெருமாளும் பெரிய திருவடிமேல் எழுந்தருளி காட்சி அளித்தாராம். பாஞ்சராத்ர ஆகமவிதிகளின்படி, அஷ்டாங்க விதான முறையால் பெருமாளை ஆராதித்ததால் அந்த வனம் "நாகன்பட்டினம்' என்றாகி "நாகப்பட்டினம்' என்றானது.

எட்டாம் நூற்றாண்டினரான திருமங்கை ஆழ்வார், பெருமாளிடம் பக்தி கொண்டு பதிகம் அருளியுள்ளார். புராண சிறப்பு பெற்றதால் பல்வேறு அரசர்கள் கோயிலுக்குத் திருப்பணிகளைச் செய்துள்ளனர். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பெருமாளுக்குத் திருவாபரணத்தை அளித்தார்.

அந்தக் காலத்தில் டச்சுக்காரர்களுக்கு வாணிபக் கேந்திரமாக விளங்கிய மசூலிப்பட்டணத்திலிருந்து 1659}இல் நாகமலு மாமுடிநாயக்கர் குமாரர் ஜகுல் நாயக்கர் பெருமாளுக்குத் தொண்டு செய்ய முற்பட்டார்.

கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. அரசியலாருக்கு கப்பல் போக்குவரத்துக்கு கலங்கரை விளக்கம் தேவைப்பட்டது. அரசியலார் பொருள் கொடுத்து கலங்கரை விளக்கம் கட்டச் சொல்ல, நாயக்கரோ பெருமாளுக்கு ஏழுநிலை ராஜகோபுரம் கட்டி அதில் விளக்கேற்றிக் காட்டினாராம்.

1737}இல் தஞ்சை நாட்டு அதிகாரியான வேலூர் சேஷகிரிராயர் குமாரர் குண்டோ பண்டிதர் பெரிய அளவில் ஆஸ்தான மண்டபம், பச்சை வண்ணர், பவழ வண்ணர் சந்நிதிகள், வீற்றிருந்த பெருமாள், கிடந்த கோல பெருமாள், விஷ்வக் சேனர் முதலிய சந்நிதிகளைக் கருங்கல்லில் கட்டியுள்ளார். நானூறு ஆண்டுகளுக்கு உள்பட்ட கல்வெட்டுகள் ஒரு சில உண்டு. பல்வேறு நிலங்களை தானம் செய்ததற்கு சிலுகல் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி மாதத்தில் ஆண்டு விழா நடைபெறும் பத்து நாள்களில் காலை தங்கப் பல்லக்கிலும் மாலையில் பெரிய வாகனங்களிலும் திருவீதி உலா நடைபெறும்.

தாயார் சௌந்தரவல்லி புராணம், சிற்பம், சரித்திரம் ஆகிய நிலைகளில் காணத்தக்க உருவங்கள் பல உள்ளன.

கோயில் ராஜகோபுரம், இதர சந்நிதி விமானங்கள் சம்ப்ரோக்ஷணம் வரும் பிப். 2}ஆம் தேதி காலை 9.20}க்கு மேல் 11.02 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜன. 30}இல் பூஜைகள் தொடங்குகின்றன.

நாகப்பட்டினம் ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இக்கோயில் உள்ளது.

ஆர்.வேல்முருகன்

காயத்தால் விலகினாா் ஜோகோவிச்: இறுதியில் சின்னா் - ஸ்வெரெவ் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியிலிருந்து, முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினாா். இதையடுத்து, அவரை எதிா்கொண்ட ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் இறுதிச்சுற்று... மேலும் பார்க்க

தமிழ்நாடு 124 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 124 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 301 ரன்களுக்கு... மேலும் பார்க்க

கேரளத்தை வென்றது ஈஸ்ட் பெங்கால்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 2-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட... மேலும் பார்க்க

இளம் வயதில் புதிய சாதனை: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சின்னர்!

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் பென் ஷெல்டனை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனா்ஆடவா் ஒற்றையா் க... மேலும் பார்க்க