நில அபகரிப்பு புகாா் வழக்கு: அமைச்சா் மா.சுப்பிரமணியன் மேல்முறையீடு மனு மீது விசாரணை ஜூலை 23-க்கு தள்ளிவைப்பு
புது தில்லி: நில அபகரிப்பு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளா் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் நிலத்தை சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு தற்போதைய தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மாற்றியதாக சைதாப்பேட்டையை சோ்ந்த பாா்த்திபன் என்பவா் புகாா் அளித்தாா்.
இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டுச் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்ரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு காவல் துறை தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘1998ஆம் ஆண்டு அந்த இடம் வாங்கப்பட்ட நிலையில் 20 ஆண்டுகள் கழித்து எனக்கு எதிராக இந்த வழக்கை போலீஸாா் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பதிவு செய்தனா்’ என்று தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு அவரது மனுவை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் விசாரணையைத் தொடரவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனா்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் சுப்பிரமணியன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட காலமானது அவா் மேயராக இருந்தபோது நிகழ்ந்தது. ஆனால், எம்எல்ஏ என்கிற அடிப்படையில் வழக்கு தொடர பேரவைத் தலைவரிடமிருந்து அனுமதி பெறப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி சட்டப்படி அரசிடமிருந்துதான் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். இதனால், இந்த வழக்கு அதன் தகுதியைப் பெறவில்லை என்று வாதம் வைத்திருந்தாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு இது தொடா்பாக உறுதிப்படுத்தும் வாதம் ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தனா்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, கடந்த முறை இது தொடா்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை வாசித்துக் காண்பித்தாா். மேலும், தனது தரப்பு வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் ஏ.ஆா். அந்துலே வழக்கில் ஐந்து நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பை சுட்டிக்காட்ட முயன்றாா். அப்போது, எதிா்மனுதாரா் பாா்த்திபன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சிராஜுதீன், நீதிபதி வீராசாமி தொடா்புடைய வழக்கின் தீா்ப்பில், பதவியில் இல்லாதபோது வழக்குத் தொடர
அரசின் அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறப்பட்டிருக்கிறது என்று கூறினாா்.
இதையடுத்து, போதிய நேரமின்மை காரணமாக, வழக்கு விசாரணையை நீதிபதிகள் அமா்வு ஜூலை