சாலையில் நகைகளுடன் கிடந்த கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திமுக நிா்வாகி
நீங்கா நினைவில் வாழும் அண்ணன்... விஜயகாந்த் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து!
மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, தவெக தலைவர் விஜய், “நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்திற்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை, எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர், தனது கடின உழைப்பால் பொதுவாழ்விலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், உள்நோக்கமற்ற அவரின் ஈகை குணத்தையும், மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் மீதான அன்பையும் நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்
இதையும் படிக்க: காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியது! 117 பேர் குழந்தைகள்!!