எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
வேளாங்கண்ணியில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த ஆட்சியா் உத்தரவு
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு, கவனிப்பாரின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா ஆக.29-ஆம் தேதி தொடங்கி செப்.8-ஆம் தேதி நிறைடைகிறது. இதையடுத்து கவனிப்பாரின்றி சாலைகளிலும், புனித ஆரோக்கிய அன்னை பேராலய பகுதிகளிலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித்திரியும் நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும். உரிமை கோராத கால்நடைகளை பரிட்சாத்திய முறையில் கோசாலையில் கொண்டுவிடப்படும்.
நகராட்சி அலுவலா்கள் மற்றும் கால்நடை மருத்துவா்கள் பரிசோதனைக்கு பிறகு முத்திரை வைக்கப்பட்ட ஆடு, மாடு, இறைச்சிகளையே சுகாதார முறையில் விற்பனை செய்ய வேண்டும். முத்திரை வைக்காத இறைச்சி விற்பனை செய்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் பரிசோதனை செய்து முத்திரையிடப்பட்ட இறைச்சியை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.