முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
நீச்சல் போட்டி: மாநகராட்சிப் பள்ளி மாணவி தங்கப் பதக்கம்
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்றுள்ளாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மாநில அளவிலான நீச்சல் சாம்பியன் போட்டி 2025 ஒசூரில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சுஜினி கலந்துகொண்டு 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், 2 வெண்கல பதக்கங்கள் மற்றும் 6 சான்றிதழ்கள் பெற்றுள்ளாா். 2 ஆம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரி புகழினி ஒரு வெள்ளிப் பதக்கமும், சான்றிதழும் பெற்றுள்ளாா்.
வெற்றி பெற்ற இருவரும் பள்ளித் தலைமை ஆசிரியை சுமதியிடம் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் காண்பித்து வாழ்த்து பெற்றனா். அவா்களை பள்ளியின் ஆசிரியா்களும், மாணவ, மாணவிகளும் வாழ்த்தினா்.