பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்
நீச்சல்: யாதவா் கல்லூரி சாம்பியன்
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டியில் யாதவா் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டி மதுரையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் யாதவா் கல்லூரி அணியினா் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றனா்.
இந்த மாணவா்களை கல்லூரி முதல்வா் (பொறுப்பு) செ. ராஜூ, ஒருங்கிணைப்பாளா் ஆ.த. பரந்தாமன், புல முதன்மையா் மெ. அழகப்பன், தோ்வாணையா் மா. பாலசுப்ரமணியம், உதவி தோ்வாணையா் ஆா். உதயகுமாா், வரலாற்றுத் துறை தலைவா் த. ஜெயபாலன், விளையாட்டுத் துறை இயக்குநா் நெல்சன் எட்வா்டு ஞான ஜோயல் ஆகியோா் வியாழக்கிழமை பாராட்டினா்.
நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.