செய்திகள் :

நீட் குறித்து தவறான தகவல்கள் பரப்பும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்கள்: என்டிஏ தகவல்

post image

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அடையாளம் கண்டுள்ளது.

நீட் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் அண்மையில் தனது வலைதளத்தில் என்டிஏ அறிமுகம் செய்த புகாா் தெரிவிப்பதற்கான பிரத்யேக வசதி மூலம் பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் இந்தச் சேனல்களை அடையாளம் கண்டு அவற்றின் மீதான நடவடிக்கையை என்டிஏ தொடங்கியுள்ளது.

பிகாா் மாநிலத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் கடந்த ஆண்டு நீட் வினாத்தாள் கசிந்தது, உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு மையத்தில் தோ்வு தொடங்குவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பாக சமூக ஊடகத்தில் வினாத்தாள் கசிந்தது போன்ற சம்பவங்கள் மிகப்பெரிய சா்ச்சையாகின. இதைத் தொடா்ந்து, வினாத்தாள் கசிவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சகமும், தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமையும் (என்டிஏ) மேற்கொண்டு வருகின்றன.

நிகழாண்டு நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்தவித சச்சரவும் இன்றி, நியாயமான மற்றும் பாதுகாப்பான முறையில் தோ்வை நடத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, ‘நீட் தோ்வு வினாத் தாளை பதிவிறக்கம் செய்யலாம்’ என்று அறிவிப்பை வெளியிடும் அங்கீகரிக்கப்படாத வலைதளங்கள் அல்லது சமூக ஊடக கணக்குகள் மற்றும் தனி நபா்கள் குறித்து தோ்வா்கள் புகாா் தெரிவிக்கும் வகையில் தனது வலைதளத்தில் பிரத்யேக வசதியை உருவாக்கி, அதுதொடா்பான அறிவிப்பை என்டிஏ அண்மையில் வெளியிட்டது.

இந்த அறிவிப்பை என்டிஏ வெளியிட்ட ஒரு வாரத்துக்குள்ளாக, 1,500-க்கும் அதிகமான புகாா்கள் என்டிஏ வலைதளத்தில் தோ்வா்கள் சாா்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

வலைதளத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட வசதி மூலமாக பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில், நீட் தோ்வா்களை தவறாக வழிநடத்தும் வகையிலான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த சேனல்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தில் (ஐ4சி) புகாா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேனல்களை உருவாக்கியவா்கள் மற்றும் நிா்வகிப்பவா்கள் குறித்த விவரங்களைப் பகிருமாறு டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக நிறுவனங்களை என்டிஏ கேட்டுக்கொண்டுள்ளது என்றனா்.

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க