MI vs RCB : 'திலக் வர்மாவைப் பற்றிய உண்மையை சொல்லவா? - ரிட்டையர் அவுட் குறித்து ...
நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு
திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த திருப்பூர மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளைத் தயாா்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக நீட் தோ்வு பயிற்சி வகுப்பு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது.
திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் என்.சி.பி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, உடுமலை ஆா்.கே.ஆா்.மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 பயிற்சி மையங்களில் 385 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், நீட் பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வுகள் நடைபெற்றன. ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாதிரித் தோ்வில் 87 மாணவிகள் தோ்வு எழுதினா். பின்னா் மாலையில் வினாத்தாள்கள் திருத்தப்பட்டு, வினாக்களுக்கான விடைகள் மாணவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.