செய்திகள் :

"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறுபடி" - ஸ்டாலின்

post image

மருத்துவ படிப்புகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

பல மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலையும் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்திருப்பதை மேற்கோள்காட்டி, நீட் தேர்வில் முழுக்க முழுக்க பணம்தான் விளையாடுகிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

நீட் தேர்வு குளறுபடிகள் | NEET

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் ஷேர் செய்திருக்கும் பத்திரிகையாளர் ஒருவரின் ட்விட்டர் பதிவில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் பெற அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மருத்துவர் மற்றும் NTA அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என சிபிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், மாணவர்களின் பெற்றோர்களை ஹோட்டலில் சந்தித்து அவர்களிடம் ஒரு சீட்டுக்கு ரூ. 90 லட்சம் என பேரம் பேசி இறுதியில் ரூ. 87.5 லட்சத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் சிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதைக் குறிப்பிட்டு ஸ்டாலின் தனது ட்வீட்டில், "நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, பணத்தைப் பற்றியது மட்டுமே என்பதை மேலும் சம்பவம் நிரூபித்திருக்கிறது.

இதனால்தான், நீட் ஒழுங்காக இல்லை என்று உரக்கச் சொல்கிறோம். அதற்கான காரணங்களும் எங்களிடம் இருக்கின்றன.

#NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.

நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.

நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!" என்று விமர்சித்திருக்கிறார்.

அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளத... மேலும் பார்க்க

Iran vs America: ஈரானைத் தாக்க இந்திய வான்வழியை பயன்படுத்தியதா அமெரிக்கா? | Fact Check

ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களைத் தாக்க அமெரிக்க ராணுவம் நடத்திய ஆப்பரேஷன் மிட் நைட் ஹேமரில் இந்தியாவின் வான் பரப்புப் பயன்படுத்தியாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலான நிலையில், அது பொய் என PIB -யின் ... மேலும் பார்க்க

IndiGO: "பறக்கத் தகுதியில்லை; செருப்பு தைக்க போ..." - குற்றச்சாட்டுக்கு நிறுவனத்தின் பதில் என்ன?

பணியிடத்தில் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இன்டிகோ விமானி ஒருவர் 3 உயர் அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார். 35 வயதாகும் அந்த விமானியை, "நீ வானில் பறக்கத் தக... மேலும் பார்க்க

"ராமர் பிறந்த மண்ணிலேயே வென்றது பாஜக அல்ல... இந்தியா கூட்டணி!" - அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, "இங்கு உள்ள எல்லோரும் இந்துக்கள் தான். இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். ஆனால், இங்கு தேவை சிறுபான்மை மக்களுக்... மேலும் பார்க்க

"முருகன் மாநாடு வீடியோவை வன்மையாகக் கண்டிக்கிறோம்; போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா?" - அதிமுக

மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பேரறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோர் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவும், பா.ஜ.க-விடம் பண்ணையடிமையாகிவிட்ட அ.தி.மு.க இதை ரசிப்பத... மேலும் பார்க்க