அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
நீலகிரி ஆட்சியா் பெயரில் போலி குறுஞ்செய்தி
நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பெயரில் போலி வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி +84 56 715 0853 என்ற
எண்ணிலிருந்து ஆட்சியா் அனுப்புவது போன்ற போலி
குறுஞ்செய்தி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது பெயரில் +84 56 715 0853 என்ற
வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வருவதாகவும் இதன்மூலம்
முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாவும் தெரியவந்துள்ளது. எனவே எனது பெயரில் இந்த எண்ணிலிருந்து போலி
குறுஞ்செய்தி அனுப்புகின்ற போலி நபருக்கு பதில் அளிக்க வேண்டாம்.
மேலும் அதில் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள வேண்டாம். இதுகுறித்து காவல் துறையின் மூலம் போலியாக குறுஞ்செய்தி அனுப்பும் நபரை
கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.