செய்திகள் :

நீ மொத மொதல்ல பேச ஆரம்பிச்சியே, அன்னைக்கே நாம நண்பர்கள் தா! - அப்பாவின் கடிதம் | #உறவின்கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அன்பு மகன் ஜீவாவிற்கு உன் அன்பை என் இறுதிவரை பெற்றுக் கொண்டிருக்க விரும்பும் உன் அப்பா எழுதுவது , நீ உனக்காகவும் எனக்காகவும் இந்த பூமிக்கு வந்து , இன்றோடு 12 வருஷம் ஆகப்போகுது . ஏதோ கண்ண மூடி ஒரு குட்டி கனவு கண்ட மாதிரி இருக்கு , வாழ்க்கை எனக்கு இப்படி வேகமாக கடந்து போனதில்ல இதுக்கு முன்னாடி .

சந்தோஷம் வேகமாகவும், துன்பமும் சோகமும் நிதானமாகதான் கடந்து போகும் போல வாழ்க்கையில , அதுக்காக இப்போ நமக்கு சந்தோஷம் மட்டும்தான் இருக்குன்னு சொல்ல வரல , என்னோட வாழ்க்க ஒரு சபிக்கப்பட்டது என்று பல தடவ உணர்ந்து இருக்கேன் , நான் எப்பவும் சந்தோஷமா இருந்தது இல்ல எப்பவும் என்ன சுற்றி ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துட்டே இருக்கும் , ஒன்னு தானா வரும் , இல்ல நானாகவே உருவாகிட்டதா இருக்கும் , அந்த மாதிரி பல தடவ மனசு உடைஞ்சு நொறுங்கும்போது உன்னோட முகமும் , நா இருக்கிறேன்பா உனக்கு என்ற வார்த்தையும் , எல்லாத்தையும் மறக்கடிச்சு இருக்கு .

நா யாரையும் கேட்டு போனம்னு நெனச்சதில்ல , எல்லாம் நல்லா இருக்கணும்னு தான் நினைப்பேன் , அப்படி இருந்தாலும் யாரும் என் கூட ரொம்ப நாள் இருந்ததில்ல , உன்ன தவிர . இப்ப தோல் வரைக்கும் வளந்துட்ட , அதனால மட்டும் நீ என் தோழன் இல்ல , என்னைக்கு நீ மொத மொதல்ல பேச ஆரம்பிச்சியோ அன்னைக்கே நாம ரெண்டு பேரும் நண்பர்கள் தா , சின்ன வயசுல நீ என்கிட்ட ஒரு நாளைக்கு 100 கேள்வியாவது கேட்ப , எதுவும் எனக்கு சலிப்ப தந்ததில்ல அதுக்கு பதில் சொல்ல எனக்கு அவ்வளவு ஆசையா இருக்கும் .

இப்ப எனக்கு தெரிஞ்சத உனக்கு சொல்லுவத விட , எனக்கு தெரியாதத உன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டது தான் அதிகம் .

படிப்பிலையும் சரி விளையாடிலும் சரி உன்ன நெனச்சு கவலைப்படுற வாய்ப்ப துளியும் கொடுக்கல , உன் கூட பழகுன ஒருத்தரும் பெருசா உன்ன குறை சொன்னதில்ல உங்க அம்மாவையும் தங்கையும் தவிர , அதுவும் எல்லா நேரமும் இல்ல.

என்னால எங்க அப்பாவுக்கு கொடுக்க முடியாத , கொடுக்க நினைக்காததை, எவ்வளவோ நீ எனக்கு கொடுத்திருக்க என் தங்கமே , நியாயமா நீ ஆசைப்பட்டது எல்லாத்தையும் ஒன்று விடாமல் வாங்கிக் கொடுக்க முடிஞ்சது இப்ப வரைக்கும் , இதுக்கு பிறகு எனக்கு அந்த சக்திய கொடுக்க அந்த பிரபஞ்சத்தை வேண்டுகிறேன் .

நீ என் வாழ்க்கைல வந்து எவ்வளவு சந்தோஷத்த கொடுத்தியோ அதைவிட பல மடங்கு இந்த சமூகத்துக்கு உன்னுடைய இருப்பு கொடுக்கணும் , கொடுப்பேன்னு ஆணித்தரமா நம்பர . என்ன மாதிரி குணம் இருக்கிறவங்கள பொதுவா யாருக்கும் பிடிக்காது , வீட்லயும் சரி வெளியேயும் சரி , சின்ன சின்ன விஷயத்துக்கு கோவப்படுறது ,எப்ப சிரிப்ப எப்ப கோபப்படுவேன்னு எனக்கே தெரியலனாலும் , நீ என்ன முழுசா புரிஞ்சிகிட்டவ .

உன்ன ஆசையா கொஞ்சும் போது , என் கூட சேர்ந்து நீயும் கொஞ்சுவ , நீ செய்யர சேட்டைகள் சில உதாரணத்துக்கு , வீட்டுக்கு வெளியே போட்டு இருக்கிற தகர சீட்டுக்கு பக்க பலமா இருக்கிற 12 அடி பைப் கம்பியில கடகடனு ஏறி மேல இருக்கிற இரும்புல தல இடிச்சுக்குமே என்ற பயம் கூட இல்லாம , மேல இருந்து கீழ சுத்திக்கிட்டே சர்ருனு பல வாட்டி வருவது,

நான் கஷ்டப்பட்டு வீட்டுல ஓட்டுன வால் ஸ்டிக்கர , கையில ரப்பர் பந்த வெச்சுகிட்டு இருக்கிற எல்லா பவுலரபோல போடுறன்னு ஒரு ஒரு ஸ்டைலா போட்டு செவுத்துல அடிச்சு கிழிக்கும் போதும் , உன் பொருள் எல்லாத்தையும் உடைச்சு முடிச்சுட்டு , அடுத்து உன் தங்கச்சி பொருளையும் விளையாடுற என்ற பெயரிலே நைசா ஒடச்சிட்டு அவல அழ வைக்கும் போது என இப்படி கோவத்துல உன்ன திட்டும்போது , சில தடவ அமைதியா இருந்துடுவ , பல தடவ ஒரு சில வார்த்தையில சில நொடியில உன் முக பாவத்துல என் கோபத்தை கரைச்சு பழைய நிலைக்கு கொண்டு வந்துருவ , என் வாழ்க்கையில யாரும் இந்த வித்தைய செஞ்சது இல்ல .

நா இன்னும் கொஞ்ச நாள் வாழனும்னு நினைக்கிறதுக்கு காரணமே நீயும் உன் தங்கச்சியும் தான், உன் அம்மாவையும் தங்கச்சியையும் நல்லா பார்த்துப்பனு நம்புறேன் , இந்த பிறந்தநாள் உனக்கு கொடுத்த சந்தோஷத்த விட , இன்னும் பல மடங்கு அடுத்து வரப்போற நூறு பிறந்த நாளுக்கும் கொடுக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் my child .

இப்படிக்கு உன் அப்பா

V. அரிபாபு

Letter Contest

கடனை அடைக்க வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் தந்தையின் வலி! - மகளுக்கு ஒரு மடல் #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒருநாள் முழுக்க நீயும் நானும் மட்டும் நிறைய பேசனும் அப்பா! - மகனின் அன்பு வேண்டுகோள் #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சேற்று வரப்பை முத்தமிட்ட உங்கள் பாதத்திற்கு ஓய்வு கொடுக்க முடியலை - மகனின் கண்ணீர் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தண்டனை தராமல் திருத்தும் புதுமை ஆசான் நீங்கள்! - அப்பாவிற்கு மகளின் பரிசு #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

விறகு வாங்க வைத்திருந்த ரூபாயை எடுத்து என் அழுகையை அணைப்பாயே அம்மா! - மகனின் மன்னிப்பு #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இன்னமும் கடினமாக உழைக்கும் அம்மா அப்பா! - மகனின் மடல் #உறவின்கடிதம்