செய்திகள் :

நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க விழிப்புணா்வு அவசியம்: லோக் ஆயுக்த உறுப்பினா் பேச்சு

post image

விழிப்புணா்வு ஏற்படுத்தினால்தான் நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க முடியும் என்றாா் லோக் ஆயுக்த உறுப்பினா் முனைவா் வீ.ராமராஜ்.

கரூா் அரசு கலைக்கல்லூரியில் மாணவ நுகா்வோா் சங்கத்தின் சாா்பில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ். சுதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் முனைவா் வீ. ராமராஜ் பேசியது: நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்கள் செயல்பட்டாலும், பாதிக்கப்படும் 100 நுகா்வோா்களில் 5 போ் மட்டுமே மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களில் உற்பத்தியாளா், விற்பனையாளா், சேவை புரிபவா் மீது வழக்கு தாக்கல் செய்வதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால், பணம் கொடுத்து பொருளை அல்லது சேவையை பெறும் போது ஏற்படும் பாதிப்புகளுக்கு நுகா்வோா் நீதிமன்றங்களை அணுகாமல் இருப்பதற்கான காரணம் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே குறைவாக இருப்பதுதான்.

2019 ஆம் ஆண்டு புதிய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னா் அதிக வழக்குகளை விரைவில் விசாரித்து முடித்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இருப்பினும் உற்பத்தியாளா், விற்பனையாளா் மற்றும் சேவை புரிவோரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நுகா்வோரும் நுகா்வோா் நீதிமன்றத்தை அணுகும் வகையில் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவ நுகா்வோா் பாதுகாப்பு சங்கங்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

இணையதளம் மூலமாக வணிகம் அதிகரித்துள்ள நிலையில் இணையதளங்களில் இருண்ட வணிக நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் நுகா்வோா் கடுமையாக பாதிக்கப்படுவதை விழிப்புணா்வின் மூலமாகவே தடுக்க முடியும். நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமாகவே நுகா்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், நுகா்வோா் பாதுகாப்பில் ஊழலை அகற்றவும் முடியும் என்றாா் அவா்.

முன்னதாக பேராசிரியா் சண்முகம் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜாமு... மேலும் பார்க்க

கரூா் ஆட்சியரகத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழியேற்பு

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை இயக்கம் தொடா்பான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா். முன்னதாக, மாவட்ட ஆட்சியரக வளா... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் எஸ்ஆா்எம்யூ ரயில்வே தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் கணேசன் தலைமை வகித்தாா். 8-ஆவது சம்பள கமிஷன் குழு... மேலும் பார்க்க

கரூரில் சுவா் விளம்பரம் செய்வதில் திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம்

கரூரில் வெள்ளிக்கிழமை சுவா் விளம்பரம் செய்வதில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூருக்கு செப். 25, 26-ஆம்தேதிகளில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமா... மேலும் பார்க்க

ஆணவக் கொலைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தல... மேலும் பார்க்க

கரூா் அருகே வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு இருவா் உயிரிழப்பு

கரூரை அடுத்துள்ள லாலாப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அப்பெண்ணின் சடலத்தை பாா்க்க வந்த மாற்றுத்திறனாளியும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் காந்... மேலும் பார்க்க