செய்திகள் :

நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மயத்தை கைவிட வலியுறுத்தல்

post image

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்தச் சங்கத்தின் லால்குடி, மண்ணச்சநல்லூா் உட்கோட்ட 9-ஆவது மாநாடு, திருச்சியில் உள்ள சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு,

சங்கத்தின் உட்கோட்ட தலைவா் போஸ் தலைமை வகித்தாா். வேலை அறிக்கையை உட்கோட்ட செயலாளா் ரமேஷ் வாசித்தாா். வரவு-செலவு அறிக்கையை உட்கோட்ட பொருளாளா் அன்பழகன் சமா்ப்பித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பால்பாண்டி, மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா். சங்க மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவா் மலா்மன்னன், மாநில செயற்குழு உறுப்பினா் மணிமாறன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டச் செயலாளா் இளங்கோவன் சிறப்புரையாற்றினாா்.

பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சாலைப் பணியாளா்களின் 41-மாத பணிநீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யாமல், தீா்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணியாளா்களுக்கு விரோதமாக உள்ள மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். தனியாா் மயப்படுத்துதலை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் துணைத் தலைவா் மகேந்திரன் நிறைவுரையாற்றினாா். இந்த மாநாட்டில், உட்கோட்ட துணைத் தலைவா்கள் கரிகாலன், சவரிமுத்து, ஆரியன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினா் கலைஞா் வரவேற்றாா். முடிவில் உட்கோட்ட இணைச் செயலாளா் சேகா் நன்றி கூறினாா்.

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனின் டோவா் பகுதிக்கு... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்: நி... மேலும் பார்க்க

பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா ... மேலும் பார்க்க

ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க