பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு...
நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா!
நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 6-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைதொடர்ந்து ஆண்டுதோறும் வருஷாபிசேக விழா நடைபெறுவது வழக்கம். 7வது ஆண்டுக்கான வருஷாபிஷேகம் இன்று காலையில் நடைபெற்றது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அம்பாள் சன்னதியில் 1008 சங்குகளும் சுவாமி சன்னதியில் 108 கலசம் வைத்தும் சிறப்பு ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது. காலை 9.00.மணிக்கு மேல் 10.30. மணிக்குள் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் ஸ்ரீ ஆறுமுக நயினார், மூல மகாலிங்கம் உள்ளிட்ட சன்னதி விமானங்களுக்கு வருஷாபிசேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.