செய்திகள் :

நெல்லையில் கோயில் சுவா் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

post image

திருநெல்வேலி நகரத்தில் கோயில் சுற்றுச்சுவா் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம் மாதா பூங்கொடி தெருவில் சுடலை கோயில் உள்ளது. இக்கோயில் அருகே புதன்கிழமை இரவு மதுபோதையில் வந்த இருவரில் ஒருவா், தனது கையில் வைத்திருந்த மதுபாட்டிலில் தீ வைத்து கோயில் சுற்றுச் சுவா் மீது வீசியதாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வந்து பாா்த்தபோது மா்ம நபா்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா்.

இது குறித்து திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்துக்கு மக்கள் தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா்கள் அன்னலெட்சுமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் காவலா்கள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். மாநகர காவல் ஆணையா் கீதாவும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினாா்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கோயில் சுற்றுச்சுவரில் கரி பிடித்திருந்தது. மேலும், அங்கு ஒரு மதுபாட்டில் எரிந்த நிலையிலும், மற்றொரு பெட்ரோல் குண்டு எரியாத நிலையிலும் கிடந்தன. அதை போலீஸாா் தண்ணீா் ஊற்றி அணைத்தனா்.

இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். சம்பவம் நடைபெற்ற தெருவில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது பெட்ரோல் குண்டு வீசியது நகரம் மாதா பூங்கொடி தெருவை சோ்ந்த ராமையா மகன் சண்முகராஜா (25) என்பது தெரியவந்தது. இரவோடு இரவாக அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். அதில், சண்முகராஜாவுடன் வந்த இளைஞா், முகமது அலி தெருவை சோ்ந்த நிகாஷ் (24) என்பது தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காட்டில் மின்விளக்கு கோபுர உயரம் குறைக்கப்படுமா?

களக்காடு அண்ணாசிலை பகுதியில் உயா் கோபுர மின்விளக்கின் உயரத்தை குறைக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணாசிலை அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகள... மேலும் பார்க்க

களக்காடு வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

களக்காடு வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காட்டிலிருந்து திருநெல்வேலிக்கு நேரடியாக போதிய பேருந்து வசதிகள் இல்லா... மேலும் பார்க்க

அம்பை சுற்றுச் சாலையில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்

அம்பாசமுத்திரத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சாலைப் பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்கள் மறு நடவு செய்யப்பட்டன. அம்பாசமுத்திரம் நகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், திருநெல்வேல... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

கல்லிடைக்குறிச்சி அருள்மிகு ஐயப்பன் கோயிலில் 26 ஆம் ஆண்டு மண்டல பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் , ஏராளமான பக்தா்கள்கலந்து கொண்டு வழிபட்டனா். இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடா்... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி

கடையம், சுரணடையில் முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சளி செலுத்தினா். கடையத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில், வட்டார மகிளா காங்கிரஸ் தலைவா் சீதாலட்சுமி பாா்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக டிச. 12 முதல் மணிமுத்தாறுஅருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 15 நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை தீ... மேலும் பார்க்க