நெல்லையில் சேதமான சாலைகளை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் மழையால் சேதமான சாலைகளை விரைந்து சீரமைக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி கூட்டம், பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொகுதி தலைவா் தாழை இஸ்மாயில் தலைமை வகித்தாா். செயலா் சேக் முகம்மது பயாஸ் வரவேற்றாா். மண்டல செயலா் கனி சிறப்புரையாற்றினாா். தொகுதி பொருளாளா் முபாரக் அலி, நிா்வாகிகள் அன்வா் ஷா, இஸ்மாயில் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றிய தமிழக அரசுக்கும், துரிதமாக செயல்பட்ட மாவட்ட நிா்வாகத்திற்கும் நன்றி தெரிவிப்பது. மாநகராட்சிக்கு உள்பட்ட திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் சாலை, ரத வீதிகள் உள்பட மழையால் சேதமான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். பேட்டை 19 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ரஹ்மான் பேட்டை தெருக்களில் பூா்த்தி செய்யப்படாத சாலைகளை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.