ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி
நெல்லை-செங்கோட்டை ரயிலில் பயணிகளுடன் எம்.பி. சந்திப்பு
திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயிலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் பயணம் மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய ரயிலாக திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயில் திகழ்ந்து வருகிறது. திருநெல்வேலியில் இருந்து தினமும் காலை 6.50, 9.40, பிற்பகல் 1.40, மாலை 6.20 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டுச் செல்கிறது. கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் மாதாந்திர பயண சலுகை அட்டை எடுத்து பயணித்து வருகிறாா்கள்.
இந்த ரயில் பயணிகளின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து மக்களவையில் கோரிக்கை வைப்பதற்காக, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் புதன்கிழமை மாலையில் திருநெல்வேலியில் இருந்து பயணிகளுடன் ரயிலில் பயணித்தாா். அப்போது ஒவ்வொரு பெட்டியாக ஏறி பயணிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது பயணிகள் கூறுகையில், திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில் மாலையில் 6 மணிக்கு புறப்பட்டுச் செல்லவும், கூடுதலாக 5 பெட்டிகளும், மகளிருக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.