செய்திகள் :

நேபாளம்: Youtube, Facebook, Instagram, X உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கம் - காரணம் என்ன?

post image

நேபாள அரசு Facebook, X, YouTube போன்ற பிரதான சமூக ஊடகங்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டிய விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

social media - சோஷியல் மீடியா - வருமான வரி

நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் கூறியதன்படி, இரண்டு டஜன் சமூக வலைத்தள நிறுவனங்கள் தாமாக முன்வந்து அரசாங்கத்தில் பதிவு செய்யும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை பின்பற்றாதபட்சத்தில், அவை முடக்கப்படுகின்றன.

அரசாங்கத்தில் பதிவு செய்துள்ள TikTok, Viber மற்றும் மூன்று சமூக ஊடக தளங்கள் நேபாளத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

நேபாள நாடாளுமன்றம் சமூக தளங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதாகவும், பொறுப்பான முறையில் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதாகவும் உறுதி செய்யும் வகையில் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

Nepal Parliament

அதன்படி, நிறுவனங்கள் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்த நேபாளத்தில் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பான கருத்துகள் தெரிவித்தால், பல லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

உள்ளடக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.

மேலும் சில விதிமுறைகள் கருத்து சுதந்திரத்திற்கு அபாயமாக இருக்கக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது ஒரு தணிக்கை கருவியாகவும், ஆன்லைனில் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் நபர்களைத் தண்டிக்கவும் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி

இது கருத்து சுதந்திரத்திற்கு தடையாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

ஆளும் தரப்பின் நிலைப்பாடு: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சட்டங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்றும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களும், நிர்வாகிப்பவர்களும் அவர்கள் பகிரும், வெளியிடும், கூறும் கருத்துக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

"எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்" - சர்டிபிகேட் கொடுத்த எ.வ.வேலு

"அதிமுகவில் பெரிய சலசலப்பு ஒன்றுமில்லை, நண்பர் எடப்பாடி பழனிசாமி விவரமானவர், இந்நேரம் முடிவு எடுத்திருப்பார்" என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பாராட்டும் வகையில் பேசியுள்ளார். எ.வ. வேலுமதுரையில... மேலும் பார்க்க

``செங்கோட்டையனுக்கு உரிமை இல்லை; அவருக்குப் பின்னால் இருப்பவர் இவர்தான்'' - தளவாய் சுந்தரம் ஓபன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வெளிப்படையாகவே பனிப்போர் நடந்து வந்தது.இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 5)... மேலும் பார்க்க

``நயினாரின் செயல் வருத்தத்தைக் கொடுத்தது; அதிமுக-வே போதும் என நினைத்தால்'' - TTV தினகரன் பளீச்

தமிழ்நாட்டில் தற்போது அரசியல் களத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க இணைந்த என்.டி.ஏ கூட்டணியில் நடைபெறும் சம்பவங்கள் பேசுபொருளாக உள்ளன.முதலில், கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ் வெளியேறினார். அதையடுத்து, அ.தி.மு.க-வில... மேலும் பார்க்க

செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த அதிரடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க

``ராஜினாமா செய்யப் போகிறேன், நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்'' - செங்கோட்டையன் ஆதரவாளர் சத்யபாமா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க

``செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்'' - ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?

செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன் என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்று ச... மேலும் பார்க்க