கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டது.
அமலலிங்கேஸ்வர் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே சுமாா் 20 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது திருமூா்த்திமலை. இதன் அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரா் கோயிலும், 900 மீட்டா் உயரத்தில் பஞ்சலிங்க அருவியும் உள்ளன.
இயற்கைச் சூழலுடன், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளதால் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் கூட்டம் அதிகளவில் காணப்பட்டு வந்தது. உள்ளூா் மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும், குளிக்கவும் தடை தொடர்ந்து 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கோயிலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அருவியில் குளிக்க முடியாமலும், அமலலிங்கேஸ்வர் கோயிலுக்குச் செல்ல முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.