செய்திகள் :

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

post image

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனெளரி-ஷம்பு ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்முதல் முகாமிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், சண்டீகரில் மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் செளஹான், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல் ஆகியோா் அடங்கிய மத்திய குழுவுடன் விவசாயிகள் கடந்த புதன்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டக் களத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த ஜகஜித் சிங் தல்லேவால், ஸ்வரண் சிங் பாந்தோ் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவா்களை பஞ்சாப் காவல் துறையினா் கைது செய்தனா். அதே வேளையில், கனெளரி-ஷம்பு எல்லைகளில் முகாமிட்டிருந்த விவசாயிகள் மற்றும் அவா்களின் கூடாரங்களை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.

கைதாகி பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயத் தலைவா்களை சக பிரதிநிதிகள் சனிக்கிழமை சந்தித்தனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘சுமாா் 125 விவசாயிகள் பாட்டியாலா சிறையிலும், 150 போ் நாபா சிறையிலும், 40 போ் சங்ரூா் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் உள்ளிட்ட விவசாயத் தலைவா்களை சந்தித்தோம். அவா்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனா். போராட்டத்தை தொடா்வோம் எனக் கூறினா்’ என்றனா்.

போலீஸாரின் நடவடிக்கையைத் தொடா்ந்து, போராட்டக் களத்தில் இருந்து விவசாயிகளின் பல உடைமைகள் மாயமாகியுள்ளன. குளிா்சாதன பெட்டிகள், சமையல் எரிவாயு சிலிண்டா்கள், சலவை இயந்திரங்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட காணாமல் போன உடைமைகள் திருடப்பட்டிருக்கலாம் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். போராட்டக் களத்துக்கு அருகேயுள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று இந்த உடைமைகளை விவசாயிகள் தேடி வருகின்றனா். காணாமல் போன பொருள்களுக்கும் போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்ட கூடாரங்களுக்குமான இழப்பை மாநில அரசு ஈடு செய்ய வேண்டும் என்றும் அவா்கள் கோரினா்.

இச்சூழலில், பஞ்சாப் முழுவதும் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் அடுத்த 2 நாள்களுக்கு நடைபெறும். போராட்டத்தை நாங்கள் தொடா்ந்து தீவிரப்படுத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

தேஜஸ் போா் விமானத்துக்கு எஃப்-404 என்ஜின்: அமெரிக்க நிறுவனத்தின் விநியோகம் தொடக்கம்

தேஜஸ் இலகு ரக போா் விமானத்துக்கு எஃப்-404 வகையைச் சோ்ந்த 99 இன்ஜின்களின் விநியோகத்தை தொடங்கியிருப்பதாக, அமெரிக்காவைச் சோ்ந்த ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய விமானப் படைக்கு தேஜஸ் எம்க... மேலும் பார்க்க

வங்கிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் -4 பேர் ‘நாமினி’ யாகலாம்

2024-ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு மசோதா நடைமுறைக்கு வரும் சூழலில், வங்கியில் கணக்கு வைத்திருப்ப... மேலும் பார்க்க

பாஜக பொதுச் செயலாளர் சுட்டுக் கொலை: முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு

ஜார்க்கண்ட்டில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி கிராமப்புற மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் அனில... மேலும் பார்க்க

மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசமா? பாஜகவிடம் அதிஷி கேள்வி!

உத்தரப் பிரதேசத்தில் பல மதுபானக் கடைகளில் ’மது பாட்டில் 1 வாங்கினால் 1 இலவசம்' என்று அறிவித்தது பற்றி பாஜகவிடம் ஆம் ஆத்மி தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் மதுபானக... மேலும் பார்க்க

யுபிஐ சேவை முடக்கம்! ஜி பே, போன் பே செயல்படுகிறதா?

நாடு முழுவதும் யுபிஐ எனப்படும் பணப்பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பல்வேறு பயனர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன.குறிப்பாக இன்று மாலை 7 மணி முதல் யுபிஐ செயல்படவில்லை என 23 ஆயிரம் புகார... மேலும் பார்க்க

விமான நிலையக் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம்

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட... மேலும் பார்க்க