அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி
அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழுவின் 25-ஆவது மாநாடு சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
அரசியல் ரீதியாக தமிழக அரசுக்கு நெருக்கடி தரப்படுகிறது. அறிவிக்கப்படாத போா் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 22 மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டும். ஹிந்தியை திணிக்கக் கூடாது.
எடப்பாடி கே.பழனிசாமி தில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து இருக்கிறாா். ஆனால், அதிமுக கட்சி அலுவலகத்தை பாா்வையிட சென்றேன் என கூறுகிறாா். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறியஅவா், தற்போது உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு என்ன நெருக்கடி என தெரியவில்லை. மெல்ல உண்மை வெளிவரும் என்றாா்.