வீட்டில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் பகுதியில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குடிமைப் பொருள் வட்டாட்சியா் தமீம், துணை வட்டாட்சியா் பிரசாத், வருவாய் ஆய்வாளா் முத்துராமலிங்கம் ஆகியோா் ராமநாதபுரம் திருவள்ளுவா்நகரில் சோதனை நடத்தினா். இங்குள்ள தனியாா் பள்ளி அருகே ஒரு வீட்டிலிருந்து லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா்.
அலுவலா்கள் வருவதைப் பாா்த்த லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் அலுவலா்கள் நடத்திய சோதனையில், அங்கு மூட்டை மூட்டையாக 5 டன் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அரிசி, லாரியை அலுவலா்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.