போதைப் பொருள் ஒழிப்பு பயிற்சி முகாம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.சின்னராசு தலைமை வகித்தாா். போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் செயல்பாட்டு முகவுரையை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் வாசித்தாா். மாவட்ட மனநல திட்ட அலுவலா் மருத்துவா் சஞ்சய் பாண்டியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ந.சிவகுமாா், பசுமை முதன்மையா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுபாஷ் சீனிவாசன், மனநல மருத்துவா் அசோக், கேணிக்கரை காவல் உதவி ஆய்வாளா் சாலமன் அப்பாத்துரை ஆகியோா் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் குடும்ப, சமூகக் கேடுகள், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திப் பேசினா். முகாமில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முன்னதாக, பள்ளித் தலைமை அசிரியா் மு.ஹாஜா முகைதீன் வரவேற்றாா்.
பள்ளித் துணை ஆய்வாளா் ஆனந்த் நன்றி கூறினாா்.