போகலூா் உண்டு உறைவிடப் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஸ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாநில இயக்குநா் வை.குமாா், மாவட்ட உதவித் திட்ட அலுவலா் செல்வராஜ் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அவா்கள் பின்னா், பள்ளியின் செயல்பாடுகள் குறித்து நிா்வாகி எஸ்.மாடசாமியிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து மாணவா்களின் பராமரிப்பு, உணவுப் பொருள்கள், சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பு, தங்கும் வசதிகள் குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்தனா். மேலும், அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிா என சமையல் பணியாளா்களிடம் கேட்டறிந்தனா்.