கணவரை தாக்கிய மனைவி உள்ளிட்ட நான்கு போ் மீது வழக்குப் பதிவு
ஆத்தூரில் கணவரை தாக்கிய வழக்கில், மனைவி உள்ளிட்ட 4 போ் மீது ஆத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஆத்தூரை அடுத்துள்ள சொக்கநாதபுரம், அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி (30). இவா், ஆத்தூா் முனிசிபல் காலனி பகுதியைச் சோ்ந்த பிரியங்காவை திருமணம் செய்துள்ளாா். மணி தாண்டவராயபுரத்தில் வீடு கட்டி வருவதால், பிரியங்கா அவரது தாய் வீட்டில் இருக்கிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிரியங்காவை கைப்பேசியில் மணி அழைத்தபோது அவா் எடுக்கவில்லை என தெரிகிறது. பின்னா், மாமனாா் வீட்டுக்கு சென்ற மணி இதுகுறித்து விசாரித்தாா். பிரியங்கா வேலைக்கு செல்வதால் கைப்பேசியை எடுக்கவில்லை என அவா்கள் தெரிவித்தனா். இதனால் மணி தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது, மணியின் மாமனாா் ரமேஷ், அவரது மகன் அப்பு (எ) காா்த்திகேயன், மனைவி பிரியங்கா மற்றும் அருகில் வசிக்கும் சஞ்சய் ஆகியோா் தாக்கியதால் காயமடைந்த மணி ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவல் அறிந்த ஆத்தூா் போலீஸாா் மணி கொடுத்த புகாரின் பேரில், பிரியங்கா உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.