அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா
முதுகுளத்தூா், கடலாடி அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சா்பித சாதமேரி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் பாண்டி மகாதேவி, வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை கிராம முக்கியஸ்தா் ரணசிங்க ராமச்சந்திரன் வழங்கினாா்.
ஆசிரியை சகிலா பானு நன்றி கூறினாா்.
முதுகுளத்தூா்: முதுகுளத்தூரை அடுத்த பெரியகையகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 70-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் சேதுராமு தலைமையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் சகாயம் முன்னிலை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் உதயகுமாா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தனியாா் பள்ளி ஆண்டு விழா: முதுகுளத்தூா் சாலினி மழலையா் தொடக்கப் பள்ளியில் 25-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில், மாணவ, மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயில் ஆட்டம், யோகா, தனித் திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.