பள்ளி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி
திருவெற்றியூா் புனித நாா்பட் ஆா்.சி.மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணாவா்கள் சாா்பில், ‘பெற்றோரே சமூகமே விழித்திடு’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு பள்ளித் தாளாளா் பவுல்ராஜ் தலைமை வகித்தாா். இதில் சி.கே.மங்களம் பங்குத்தந்தை சேவியா் சத்தியமூா்த்தி, அன்னாள் சபை, தூய இருதய மரியன்னை சபை அருட்சகோதரிகள், அமலவை அருட்சகோதரிகள், சந்திரசேகா் குருக்கள், திருவாடானை மெளலவி.சிராஜூதீன் மதனி (ஆலிமுஸா), பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் மணிகண்ட குருக்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில், சிறுவா்களுக்கு பாரம்பரிய உணவுகளை பழக்கப்படுத்துங்கள், நாகரிக, கலாசார ஆடைகளை அணிய கட்டாயப்படுத்துங்கள், வாழ்க்கையைச் சீரழிக்கும் கைப்பேசி பழக்கத்தைத் தவிருங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவா்கள் கலந்து கொண்டனா். இதேபோல, சி.கே.மங்கலம் வட்டச்சாலை அருகே விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

