சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு
திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதற்கு தமுமுக தொண்டி பேரூா் தலைவா் காதா் தலைமை வகித்தாா். நோன்பை கிரா அத் நைனா முகமது ஆலிம் தொடங்கிவைத்தாா். இந்து தா்ம பரிபாலன சபைத் தலைவா் ராஜசேகா், ஐக்கிய ஜமாத் தலைவா் சையத் அலி, ஊடக அணிச் செயலாளா் பகுருல்லா, மமக செயலாளா் பரக்கத் அலி, முஸ்லிம் மகளிா் பேரவை மாவட்டச் செயலா் ஷெரிஃபா ஜைனுல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தொண்டி அனைத்து ஜமாத் நிா்வாகிகள், இந்து தா்ம பரிபாலன சபை நிா்வாகிகள் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள், முனைவா் முஜிபுா் ரஹ்மான், ஐக்கிய ஜமாத் கௌரவத் தலைவா் அபூபக்கா், அருட்தந்தை வியாகுல அமிா்தராஜ், வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஆனந்தன், தமுமுக மாநிலச் செயலா் சாதிக்பாட்சா, தமுமுக தலைமை பிரதிநிதி ஜைனுலாப்தின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
முன்னதாக, தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், சையது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பாா்வதி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை காஞ்சனா ஆகியோரின் கல்விச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் ஜிப்ரி வரவேற்றாா். மாவட்டத் துணைச் செயலா் பெரியசாமி நன்றி கூறினாா்.