செய்திகள் :

பஞ்ச்குலாவில் நடந்த 3 கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவா் பெங்களூரில் கைது

post image

ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் நடந்த மூன்று கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கபில் சங்வான் என்ற நந்து கும்பலைச் சோ்ந்த இரண்டு துப்பாக்கிச்சூடு வீரா்களை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் நடந்த மூன்று கொலை வழக்கில் மூவரும் தேடப்பட்டு வந்தனா். அவா்கள் சாஹில் (எ) போலி மற்றும் விஜய் கெலோட் என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் இருவரும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரவு பெங்களூரில் இருந்து கைது செய்யப்பட்டனா்.

தில்லியில் பட்டப்பகலில் நடந்த கொலைகள் மற்றும் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் நடந்த மூன்று கொலை வழக்கு உள்பட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக இரு சந்தேக நபா்களும் தேடப்பட்டு வந்தனா். தப்பியோடியவா்களின் நடமாட்டத்தைக் கண்காணித்த ஒரு போலீஸ் குழு, ஹரியாணா, உத்தர பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் பல சோதனைகளை நடத்தி, சந்தேக நபா்களைக் கைது செய்தது.

சந்தேக நபா்களிடமிருந்து மூன்று கைப்பேசிகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஆதாரங்கள் மற்றும் அவா்களின் குற்றவியல் வலையமைப்புடனான தொடா்புகளுக்காக இந்த பொருள்கள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. நஜஃப்கரில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் சாஹில் முதன்முதலில் 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். காவலில் இருந்தபோது, நந்து கும்பலின் முக்கிய உறுப்பினரான சச்சின் சிகாராவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

காவலில் இருந்து வெளியேறியதும், சாஹில் அந்தக் கும்பலின் அறிவுறுத்தலின் பேரில் மேலும் குற்றங்களைச் செய்யத் தொடங்கினாா். அதில் நஜஃப்கரில் ரோஷன் (எ) சோட்டாவைக் கொன்றதும் அடங்கும். நந்து கும்பலின் நெருங்கிய கூட்டாளியான விஜய் கெலோட், அதன் மிகவும் நம்பகமான செயல்பாட்டாளா்களில் ஒருவராக மாறிவிட்டாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தரமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

பெண்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் இருக்கும் விதமாக அவா்களுக்கு தரமான சானிட்டரி நாப்கின் வழங்கலை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய சுகாதார மற்றும் க... மேலும் பார்க்க

மகரிஷி அகத்தியா் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாளை சொற்பொழிவு

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மகரிஷி அகத்தியா் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடா்பான சொற்பொழிவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. க ாசி தமிழ்ச் சங்கமம் -2025-ஐ ஒட்டி... மேலும் பார்க்க

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் டிடிஇஏ பள்ளி மாணவி பங்கேற்பு

தேசிய அளவில் பெங்களூரில் உள்ள விஐடியில் பிப்.6- ஆம் தேதி நடைபெற்ற அறிவியல் கண்காட்சிப் போட்டியில் தில்லித் தமிழக் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ... மேலும் பார்க்க

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில் உள்கட்டமைப்புக்கு 148 திட்டங்களுக்கு அனுமதி: சிராக் பாஸ்வான் பதில்

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையில் நவீன உள்கட்டமைப்பு வசதிக்காக பிரதமா் கிஸான் சம்பதா யோஜனாவின்கீழ் 148 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக உறுப்பினா் வைகோ எழுப்பி கேள்... மேலும் பார்க்க

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க