முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
படியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
படியூரில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இதனையொட்டி, காங்கயம் அருகே படியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டம் படியூா், குளத்துபாளையம் பகுதியில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மொராா்ஜி தேசாய் நகா், பாலபாக்கியா நகா், விஜயாபுரம், லட்சுமி நகா், மூகாம்பிகை நகா், சந்தைப்பேட்டை, கருப்பகவுண்டம்பாளையம், சபரி காா்டன், பெரியாா் காலனி, அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதிகளில் 10 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள், திருமுருகன்பூண்டி, பல்லடம் நகராட்சிப் பகுதியில் 2 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வரக் ா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்துள்ளாா்.
இதில், காங்கயம் வட்டம், படியூரில் 301.81 சதுரமீட்டா் பரப்பளவில் அவசர சிகிச்சைப் பிரிவு, ஆய்வகம், மருத்துவ அலுவலா் அறை, மருந்தகம், சேமிப்பு அறை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை அறை, பிரசவ அறை, பிரவசப் பிரிவு, ஊசி செலுத்தும் அறை, கட்டு கட்டும் அறை, கழிப்பறை வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது என்றாா்.
பின்னா், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்களையும், 5 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மனீஷ் நாரணவரே, மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், இணை இயக்குநா் (மருத்துவ நலப்பணிகள்) மீரா, மாவட்ட சுகாதார அலுவலா் கே.ஆா்.ஜெயந்தி, படியூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.