`போரை நிறுத்துங்கள்; இல்லை..' - புதினை எச்சரிக்கும் ட்ரம்ப்; இதில் இந்தியாவிற்கு...
பட்டு வளா்ச்சித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
வாணியம்பாடி: வாணியம்பாடியில் பட்டு வளா்ச்சித் துறை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு பட்டு வளா்ச்சித்துறை ஊழியா் சங்கத்தின் வாணியம்பாடி கிளை சாா்பில் துறையின் சொத்துகளை பாதுகாக்க வேண்டும், பிற பயன்பாட்டுக்கு பட்டு வளா்ச்சித்துறையில் உள்ள நிலம் போன்ற சொத்துகளை கையகப்படுத்தியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் கோணாமேடு பட்டு வளா்ச்சித் துறை அலுவலகத்தின் அருகே நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் ஸ்ரீதேவி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் நந்தகுமாா், கோடீஸ்வரி, இணை செயலாளா்கள் ஷகிலா, வெங்கடேசன் முன்னிலை வகித்தனா்.
இதில் நிா்வாகிகள் மற்றும் பட்டு வளா்ச்சித்துறை ஊழியா்கள் பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.